சனி, 23 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்!!!



இரண்டாம் உலகம்-தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு FANTASY விசுவல் விருந்து.

முதல் பாகம் நன்றாய் இருந்தது ,இரண்டாம் பாகமும் ஓகே சில காட்சிகளைத் தவிர.செல்வராகவன் இரண்டு உலகங்களின் கதைளை காதல் எனும் வேர் கொண்டு கிராபிக்ஸ் காட்சிகளின்  மூலம் அழகாய் புனைந்திருக்கிறார்.ஆனால் சில இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளில் ரியலாக இல்லாமல் ஓவியத் தன்மை இருந்ததை மாற்றியிருக்கலாம்
செல்வராகவன்,ஆர்யா,அனுஷ்கா மற்றும் விசுவல் கலைஞர்களின் உழைப்பு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மாஸ் மசாலா மிக்ஸான படங்களையே பார்த்து சலித்துப் போன நம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு சிற்சில சிறிய சுவாரசிய முடிச்சுகளுடன் தமிழில் வெளிவந்திருக்கும் கிராபிக்ஸ் நவீனம்.செல்வராகவன் ஓர் ஜீனியஸ் என்பதை படத்தின் லீட் ரோல்களை கூர்ந்து கவனித்திருந்தால் புரியும்.காதலும் பிரிவும் வலி நிறைந்தது என்பதை இரண்டு உலகங்களின் லீட்  ரோல்களின் மூலம் அழகாய் உணர்த்தியிருக்கிறார்.

இரண்டாம் உலகத்தில் கடவுளாக காண்பிக்கப்படும் அம்மா எனும் கதாபாத்திரத்தை இன்னும் உயிர்ப்புடன் காண்பித்திருக்கலாம்.வேற்று உலகத்தில் காண்பிக்கப்படும் வில்லன்கள் சில நேரங்களில் காமெடியனாக தெரிவதையும்  அங்கு இருக்கும் வெள்ளையின மக்கள் பேசும் தமிழுக்கும் அதன் டப்பிங்கையும்  கவனித்து திருத்தி இருக்கலாம்.

வழக்கமான காதல் கதைகளுக்கு நடுவே இரண்டு இணை உலகங்களின் கதையை இயக்குனர் விசுவல் மூலம் வித்யாசமாக பதிவு செய்திருக்கிறார்.என்னைப் பொறுத்த வரை கொடுக்கும் 120 ரூபாய்க்கு படம் கண்டிப்பாக தகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக