திங்கள், 11 நவம்பர், 2013

சதயத் திருநாள்


முற்கால சோழ வம்சத்தின் கீர்த்தியை பிற்காலத்தில் நிலைநாட்டியதோடு மட்டுமல்லாமல், தமிழர் கீர்த்தியை உலகெங்கும் பறை சாட்டியவர் மாமன்னர் இராஜராஜ சோழன்.ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம்,தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

பட்டங்கள்
————–—–
இராஜகேசரி,மும்முடிச் சோழ சக்கரவர்த்தி,சிவபாத சேகரன்,காந்தளூர் களமறுத்துதருளிய தேவர்,பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம்,நிகரிலிச் சோழன்….

Rajakesari


சோழரின் படைப் பிரிவுகள்
——————————————
பெருந்த நாட்டு ஆனையாட்கள்
பண்டித சோழ தெரிந்த வில்லிகள்
உத்தம சோழ தெரிந்த வில்லிகள்
நிகரிலி சோழ தெரிந்த உடநிலை குதிரைச் சேவகர்
மும்மடி சோழ தெரிந்த ஆணைப்பாகர்
வீர சோழ அனுக்கர்
பராந்தக கொங்காவலர்
மும்மடி சோழ தெரிந்த பரிவாரத்தார்
கேரளாந்தக தெரிந்த பரிவாரத்தார்
ஜனநாத தெரிந்த பரிவாரத்தார்
சிங்களாந்தக தெரிந்த பரிவாரத்தார்
சிறுதநாட்டு வடுக காவலர்
வலங்கை வேலைக்காரர்
பெருந்தநாட்டு வலங்கை வேலைக்காரப் படைகள்
அழகிய சோழ தெரிந்த வலங்கை வேலைக்காரர்
அரிதுகலங்கன் தெரிந்த வலங்கை வேலைக்காரர்
சண்டபராகிரம தெரிந்த வலங்கை வேலைக்காரர்
திரய சிகாமணி தெரிந்த வலங்கை வேலைக்காரர்
மூர்த்த விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேலைக்காரர்
நித்த வினோத தெரிந்த வலங்கை வேலைக்காரர்
ராஜ கந்திரவ தெரிந்த வலங்கை வேலைக்காரர்
ராஜராஜ தெரிந்த வலங்கை வேலைக்காரர்
ரானாமுக பீம தெரிந்த வலங்கை வேலைக்காரர்
விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேலைக்காரர்
கேரளாந்தக வாசல் திருமெய்க்காப்பாளர்
அனுக்க வாசல் திருமெய்க்காப்பாளர்
பரிவார மெய்க்காப்பாளர்கள்
பலவகை புறம்படிகாவலர்
சொழாந்தியம் – கடற்படைப் பிரிவு

இன்றும் அவரின் படைகள் குடியமர்ந்த நிலைகளை குறிக்கும் வகையில் உடையாளூர்,பட்டீஸ்வரம் மற்றும் தாரசுரத்திற்கு இடைப்பட்ட ஊர்களின் பெயர்கள் அப்படைவீடுகளின் சில பெயர்களை தாங்கியே நிற்கின்றன.

கீழ்க்கண்ட மெய்கீர்த்தி அவரின் அழியாப் புகழை எடுத்தியம்பி நிற்கின்றது .

‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்குயுரிமை பூண்டமை
மனக்கொளக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங்
கங்கை பாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங்
கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழத்தர ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற்
கொண்ட தன்னெழில் வளரூழியுனெல்லா யாண்டுந் தொழுதக
விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோ ராஜகேசரி
வர்மரான ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு…….."


இப்புவியில் அவர் தோன்றிய நன்னாளான இந்த ஐப்பசி சதய நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றுவோமாக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக