சனி, 23 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்!!!



இரண்டாம் உலகம்-தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு FANTASY விசுவல் விருந்து.

முதல் பாகம் நன்றாய் இருந்தது ,இரண்டாம் பாகமும் ஓகே சில காட்சிகளைத் தவிர.செல்வராகவன் இரண்டு உலகங்களின் கதைளை காதல் எனும் வேர் கொண்டு கிராபிக்ஸ் காட்சிகளின்  மூலம் அழகாய் புனைந்திருக்கிறார்.ஆனால் சில இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளில் ரியலாக இல்லாமல் ஓவியத் தன்மை இருந்ததை மாற்றியிருக்கலாம்
செல்வராகவன்,ஆர்யா,அனுஷ்கா மற்றும் விசுவல் கலைஞர்களின் உழைப்பு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மாஸ் மசாலா மிக்ஸான படங்களையே பார்த்து சலித்துப் போன நம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு சிற்சில சிறிய சுவாரசிய முடிச்சுகளுடன் தமிழில் வெளிவந்திருக்கும் கிராபிக்ஸ் நவீனம்.செல்வராகவன் ஓர் ஜீனியஸ் என்பதை படத்தின் லீட் ரோல்களை கூர்ந்து கவனித்திருந்தால் புரியும்.காதலும் பிரிவும் வலி நிறைந்தது என்பதை இரண்டு உலகங்களின் லீட்  ரோல்களின் மூலம் அழகாய் உணர்த்தியிருக்கிறார்.

இரண்டாம் உலகத்தில் கடவுளாக காண்பிக்கப்படும் அம்மா எனும் கதாபாத்திரத்தை இன்னும் உயிர்ப்புடன் காண்பித்திருக்கலாம்.வேற்று உலகத்தில் காண்பிக்கப்படும் வில்லன்கள் சில நேரங்களில் காமெடியனாக தெரிவதையும்  அங்கு இருக்கும் வெள்ளையின மக்கள் பேசும் தமிழுக்கும் அதன் டப்பிங்கையும்  கவனித்து திருத்தி இருக்கலாம்.

வழக்கமான காதல் கதைகளுக்கு நடுவே இரண்டு இணை உலகங்களின் கதையை இயக்குனர் விசுவல் மூலம் வித்யாசமாக பதிவு செய்திருக்கிறார்.என்னைப் பொறுத்த வரை கொடுக்கும் 120 ரூபாய்க்கு படம் கண்டிப்பாக தகும்.

புதன், 13 நவம்பர், 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் - நெஞ்சை விம்மச் செய்யும் சிற்பங்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இராசராசேச்சுரம் என்னும் பெருவுடையார் கோவிலை அருண்மொழிவர்மனாம் இராசராசசோழன் கட்டியபோது, அக்கோவிலில் சிலைகள், அழகிய கோபுரத்தில் பதித்த கற்கள், இவற்றில் பட்டுத் தெறித்த சிற்பிகளின் உளிகள் எழுப்பிய ஓசைகள் மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒலித்துள்ளது .

தமிழ்த்தாயின் பேருரு, சிலை வடிவில்!

ஈழத்தில் சிங்களப் பேரினவாதக் கொடியோர் தமிழர்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைக் காட்சிகள் சிலை வடிவில்!

வானில் இருந்து கொத்துக்கொத்தாகத் தமிழர் மீது பாயும் குண்டுகள், உடல்கள் சிதைந்து துடித்து மடியும் தமிழர்கள், தமிழ்ப் பெண்களின் வயிறை பயனைட் கத்திகள் கிழித்துக் கருவில் உருவாகிய பிஞ்சுகள் அழிக்கப்பட்ட கொடூரம் சிலைவடிவில்!

பிறந்த மண்ணை விட்டு கூட்டம், கூட்டமாக முதிர் வயதினரும், பாலகர்களும் உடன் வர, தமிழர்கள் அடைக்கல நிழல் தேடிச் செல்லும் பேரவலம் சிலை வடிவில்!

குண்டுமழை நெருப்பில் துடிதுடித்துத் தமிழர்கள் செத்திடும் துன்பம் சிலைவடிவில்!

-நெருடல் .காம்



























-

திங்கள், 11 நவம்பர், 2013

சதயத் திருநாள்


முற்கால சோழ வம்சத்தின் கீர்த்தியை பிற்காலத்தில் நிலைநாட்டியதோடு மட்டுமல்லாமல், தமிழர் கீர்த்தியை உலகெங்கும் பறை சாட்டியவர் மாமன்னர் இராஜராஜ சோழன்.ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம்,தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

பட்டங்கள்
————–—–
இராஜகேசரி,மும்முடிச் சோழ சக்கரவர்த்தி,சிவபாத சேகரன்,காந்தளூர் களமறுத்துதருளிய தேவர்,பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம்,நிகரிலிச் சோழன்….

Rajakesari


சோழரின் படைப் பிரிவுகள்
——————————————
பெருந்த நாட்டு ஆனையாட்கள்
பண்டித சோழ தெரிந்த வில்லிகள்
உத்தம சோழ தெரிந்த வில்லிகள்
நிகரிலி சோழ தெரிந்த உடநிலை குதிரைச் சேவகர்
மும்மடி சோழ தெரிந்த ஆணைப்பாகர்
வீர சோழ அனுக்கர்
பராந்தக கொங்காவலர்
மும்மடி சோழ தெரிந்த பரிவாரத்தார்
கேரளாந்தக தெரிந்த பரிவாரத்தார்
ஜனநாத தெரிந்த பரிவாரத்தார்
சிங்களாந்தக தெரிந்த பரிவாரத்தார்
சிறுதநாட்டு வடுக காவலர்
வலங்கை வேலைக்காரர்
பெருந்தநாட்டு வலங்கை வேலைக்காரப் படைகள்
அழகிய சோழ தெரிந்த வலங்கை வேலைக்காரர்
அரிதுகலங்கன் தெரிந்த வலங்கை வேலைக்காரர்
சண்டபராகிரம தெரிந்த வலங்கை வேலைக்காரர்
திரய சிகாமணி தெரிந்த வலங்கை வேலைக்காரர்
மூர்த்த விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேலைக்காரர்
நித்த வினோத தெரிந்த வலங்கை வேலைக்காரர்
ராஜ கந்திரவ தெரிந்த வலங்கை வேலைக்காரர்
ராஜராஜ தெரிந்த வலங்கை வேலைக்காரர்
ரானாமுக பீம தெரிந்த வலங்கை வேலைக்காரர்
விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேலைக்காரர்
கேரளாந்தக வாசல் திருமெய்க்காப்பாளர்
அனுக்க வாசல் திருமெய்க்காப்பாளர்
பரிவார மெய்க்காப்பாளர்கள்
பலவகை புறம்படிகாவலர்
சொழாந்தியம் – கடற்படைப் பிரிவு

இன்றும் அவரின் படைகள் குடியமர்ந்த நிலைகளை குறிக்கும் வகையில் உடையாளூர்,பட்டீஸ்வரம் மற்றும் தாரசுரத்திற்கு இடைப்பட்ட ஊர்களின் பெயர்கள் அப்படைவீடுகளின் சில பெயர்களை தாங்கியே நிற்கின்றன.

கீழ்க்கண்ட மெய்கீர்த்தி அவரின் அழியாப் புகழை எடுத்தியம்பி நிற்கின்றது .

‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்குயுரிமை பூண்டமை
மனக்கொளக் காந்தளுர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங்
கங்கை பாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங்
கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழத்தர ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற்
கொண்ட தன்னெழில் வளரூழியுனெல்லா யாண்டுந் தொழுதக
விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோ ராஜகேசரி
வர்மரான ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு…….."


இப்புவியில் அவர் தோன்றிய நன்னாளான இந்த ஐப்பசி சதய நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றுவோமாக!!!